Home 13வது பொதுத் தேர்தல் என்னுடன் போட்டியிட தயாரா? சுவா சொய் லெக்குக்கு சவால் விடுகிறார் லிம் கிட் சியாங்

என்னுடன் போட்டியிட தயாரா? சுவா சொய் லெக்குக்கு சவால் விடுகிறார் லிம் கிட் சியாங்

580
0
SHARE
Ad

2ஜோகூர்பாரு, மார்ச் 26- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில்  ஜோகூர் கேலாங் பாத்தா  தொகுதியில் போட்டியிட போவதாக ஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியில் தன்னுடன் போட்டியிட தயாரா? என்று ம.சீ.ச. தலைவர் சுவா சொய் லெக்குக்கு சவால் விடுத்துள்ளார்.

ம.சீ.ச. தலைவர் சுவா இதுவரை எந்த தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

சுவா சொய் லெக்  வரும் பொதுத் தேர்தலில் எந்த தொகுதியிலும் நிற்க மாட்டார் எனவும் நாடு முழுக்க சுற்றிச் சுழன்று சீன வாக்குகளை மசீசவுக்காகவும் தேசிய முன்னணிக்காகவும் பெற்றுத் தர பிரச்சாரம் மட்டும் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்க்கட்சியினர் தங்களின் சொந்த தொகுதியில் சரியான சேவையை வழங்காத காரணத்தால்தான் தொகுதி மாறுகின்றார்கள் என்று தேசிய முன்னணி தலைவர்கள் குறைகூறி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் லிம் கிட் சியாங்கின் சவாலை ஏற்று சுவா சொய் லெக் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவாரா என்று இதுவரை எந்த பதில் அறிக்கையும் இல்லை.