Home நாடு ரேமண்ட் கோ கடத்தல்: செல்போன் சமிக்ஞை கிடைத்ததாக மகன் தகவல்!

ரேமண்ட் கோ கடத்தல்: செல்போன் சமிக்ஞை கிடைத்ததாக மகன் தகவல்!

855
0
SHARE
Ad

Raymond kohகோலாலம்பூர் – பாதிரியார் ரேமண்ட் கோ கடத்தப்பட்ட மூன்று மணி நேரங்களில் அவரது செல்பேசியில் இருந்து சமிக்ஞை கிடைத்ததாக ரேமண்ட கோவின் மகன் ஜோனாதன் இன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தாமான் மாயாங்கில் மதியம் 2 மணியளவில், சமிக்ஞை கிடைத்ததாக காவல்துறையைச் சேர்ந்த, “தொழில்நுட்ப அதிகாரி” தன்னிடம் தெரிவித்ததாக ஜோனாதன் குறிப்பிட்டார்.

எனினும், காவல்துறையால், எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என ரேமண்ட் கோ உட்பட 4 பாதிரியார்கள் மாயமான சம்பவத்தை விசாரணை செய்து வரும் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice