Home நாடு நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்

நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்

1081
0
SHARE
Ad

Clare-Rewcastle-Brownகோலாலம்பூர் – கொலை செய்யப்பட்ட எம்ஏசிசி தொடர்புடைய துணை அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், 1எம்டிபி ஊழல் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை (Draft) ஒன்றை தனக்கு அனுப்பியதாக ‘சரவாக் ரிப்போர்ட்’ ஆசிரியர் கிளேர் ரியூகேஸ்டில் பிரவுன் கூறியிருக்கிறார்.

என்றாலும், அந்த வரைவை அதிகாரிகள் போலி என்று கூறி விட்டதாக, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தனக்கு எதிராகத் தாக்கல் செய்திருக்கும் வழக்கு தொடர்பான தற்காப்பு அறிக்கையில் கிளேர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு, ஜூலை 27-ம் தேதி, முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அப்துல் கானி பட்டேல் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மறுநாள் தான் அந்த வரைவைப் பெற்றதாகவும் கிளேர் தெரிவித்திருக்கிறார்.