Home இந்தியா பேராசிரியர் மா.நன்னன் காலமானார்!

பேராசிரியர் மா.நன்னன் காலமானார்!

1112
0
SHARE
Ad

Nannan_1_10024_14251சென்னை – தமிழ்ப் பேராசிரியர் மா.நன்னன்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94.

அவரது மறைவுக்கு தமிழகத்தின் பல தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவரான நன்னன், 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைக்காட்சியில் கற்றல் முறையில் தொடர்ந்து நிகழ்ச்சிப் படைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.