Home நாடு நவீன் கொலை வழக்கு: ஜனவரி 11-க்கு ஒத்தி வைப்பு!

நவீன் கொலை வழக்கு: ஜனவரி 11-க்கு ஒத்தி வைப்பு!

963
0
SHARE
Ad

Nhaveensodomisedcaseகோலாலம்பூர் –  18 வயதான டி.நவீன் தனது சக நண்பர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

வேதியியல் அறிக்கை இன்னும் தயாராகவில்லை என துணை அரசாங்க வழக்கறிஞர் முகமது சியாஃபிக் முகமது சசாலி கூறியதையடுத்து நீதிபதி மொகமட் அமின் ஷாகுல், இவ்வழக்கை ஓத்தி வைத்தார்.

நீதிபதி இதனை அறிவிக்கும் போது, இறந்த நவீனின் தாயும், இவ்வழக்கில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 4 இளைஞர்களின் பெற்றோரும் அங்கிருந்தனர்.

#TamilSchoolmychoice

நவீன் வழக்கில் கடந்த ஜூன் 19-ம் தேதி, 4 பருவ வயதினர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.