Home நாடு அம்னோவில் 2 தலைமைப் பதவிகளுக்குப் போட்டி இல்லை – தீர்மானம் ஏற்கப்பட்டது!

அம்னோவில் 2 தலைமைப் பதவிகளுக்குப் போட்டி இல்லை – தீர்மானம் ஏற்கப்பட்டது!

973
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவில் தேசியத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளைப் போட்டியின்றி தேர்வு செய்ய அம்னோ இளைஞர் பிரிவு கொண்டு வந்த தீர்மானம் கட்சியினரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் அம்னோ பொதுப்பேரவை 2017-ல் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் பிரிவு அறிவித்த முடிவுக்கு கட்சியினர் எழுந்து நின்று தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து அம்னோ தலைவராக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அம்னோ துணைத்தலைவரும் வரும் அம்னோ தேர்தலில் போட்டியிடமாட்டார்கள்.