Home இந்தியா பெரிய பாண்டியன் உடலுக்கு தமிழக முதல்வர் அஞ்சலி!

பெரிய பாண்டியன் உடலுக்கு தமிழக முதல்வர் அஞ்சலி!

730
0
SHARE
Ad

Periyapandianசென்னை – ராஜஸ்தானில் கொள்ளை கும்பலைப் பிடிக்கப் போன இடத்தில், வீரமரணம் அடைந்த மதுரவாயல் காவல்துறை இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடல் இன்று வியாழக்கிழமை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பெரிய பாண்டியனின் உடல் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊர் கொண்டு செல்லப்படவிருக்கிறது.