Home நாடு நஜிப் கூட்டத்தில் கலந்து கொண்ட மகாதீர்!

நஜிப் கூட்டத்தில் கலந்து கொண்ட மகாதீர்!

1125
0
SHARE
Ad

mahathir-palestine-protests-putrajayaபுத்ரா ஜெயா – நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, மதிய வேளையில் புத்ரா ஜெயா பள்ளிவாசலில் பிரதமர் நஜிப் தலைமையில் அனைத்து அரசியல் தரப்புகளும் இணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கூட்டமொன்றை நடத்தினர்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து தேசிய முன்னணியும் அதன் ஆதரவு கட்சிகளும் இந்தக் கூட்டத்தை நடத்தின.

mahathir-palestine-protests-putra jayaஇந்தக் கூட்டத்தில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடியும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமரும் பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவருமான துன் மகாதீரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். அம்னோ தலைவர்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்து விட்டு பாலஸ்தீன ஆதரவுக் கூட்டம் நடைபெற்ற பள்ளிவாசல் மண்டபத்தில் ஒரு மூலையில் சென்று அமர்ந்த மகாதீரை பலரும் ஆர்வத்துடன் நெருங்கி கைகுலுக்கியதோடு, தங்களின் செல்பேசிகளில் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

mahathir-palestine-protests-putrajaya-1மகாதீரின் வருகை குறித்துக் கருத்துரைத்த பிரிபூமி பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரான சைட் சாதிக் அரசியல் வேறுபாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, பாலஸ்தீனத்துக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கத்தில்தான் மகாதீர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று தெரிவித்தார்.

ஐநா வாக்கெடுப்பு

இதற்கிடையில் வியாழக்கிழமை இரவு நியூயார்க்கில் ஐக்கிய நாட்டு சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டிரம்பின் முடிவுக்கு எதிராக 127 நாடுகள் வாக்களித்து, ஜெருசலத்தை இஸ்ரேலின் புதிய தலைநகராக மாற்றும் முடிவை அமெரிக்கா கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றனர்.

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசிக்கும் என்ற எச்சரிக்கையையும் அமெரிக்கா சார்பில் ஐ.நாவுக்கான அதன் தூதர் நிக்கி ஹேலி விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்கெடுப்பில் மலேசியா அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தது என்பதோடு, அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகக் கருதப்பட்ட இந்தியாவும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

35 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக 9 நாடுகள் வாக்களித்தன.