Home உலகம் சிங்கப்பூர் செந்தோசா ரிசார்ட்டின் மேற்கூரை விழுந்து 3 பேர் காயம்!

சிங்கப்பூர் செந்தோசா ரிசார்ட்டின் மேற்கூரை விழுந்து 3 பேர் காயம்!

876
0
SHARE
Ad

Sentosa Resortசிங்கப்பூர் – சிங்கப்பூரின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றான செந்தோசா கேளிக்கை விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கூரையின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

மூவரில் இருவர் சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், ஒருவருக்கு சம்பவ இடத்திலேயே மீட்புக் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்ததாகவும் சிங்கப்பூர் தற்காப்புப் படை தெரிவித்திருக்கிறது.

அங்கிருந்த சூதாட்ட மையத்தின் மேற்கூரைப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து நேர்ந்ததாக சேனல் நியூஸ் ஆசியா செய்தி வெளியிட்டிருக்கிறது.