Home நாடு ரேலா உறுப்பினர்களுக்குத் தபால் வாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம்

ரேலா உறுப்பினர்களுக்குத் தபால் வாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம்

706
0
SHARE
Ad

Rela membersபுத்ராஜெயா – வாக்களிப்பதில் மலேசியக் காவல்துறைத் தன்னார்வலர்கள் படைப் பிரிவில் உள்ளவர்களும், ரேலா எனப்படும் மக்களின் தன்னார்வலர் காவலர் பிரிவில் உள்ளவர்களும் ஒரே பிரிவில் இல்லையென தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா அறிவித்திருக்கிறார்.

14-வது பொதுத்தேர்தலில் சுமார் 4 மில்லியன் தபால் வாக்காளர்கள் வாக்களிக்கப் போவதாகவும், அவர்களில் ரேலா உறுப்பினர்கள், மலேசியக் காவல்துறைத் தன்னார்வலர்கள் படைப் பிரிவில் உள்ளவர்கள் என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது.

அது போன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானது மற்றும் மக்களைக் குழப்புவதற்காக பரப்பப்படுகின்றது என தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice