மார்ச். 27- மகாத்மா காந்தியை கொலை செய்ய நடந்த சதித்திட்டங்கள் சினிமா படமாகிறது.
இப்படத்தை சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார். மனோகர் மல்கோங்கர் என்ற எழுத்தாளர் காந்தி சுடப்பட்ட சம்பவங்களை புத்தகமாக எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராகிறது. எழுத்தாளர் மனோகர் மல்கோங்கர் பிர்லா ஹவுசில் காந்தி வசித்த வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் குடியிருந்தவர்.
எனவே அவருக்கு முழு விவரங்களும் தெரியும். அத்துடன் காந்தியை சுட்ட கோட்சேவின் உறவினர்களை நேரில் சந்தித்து பேசி அவர்கள் சொன்ன தகவல்களையும் இப்புத்தகத்தில் சேர்த்து உள்ளார்.
காந்தியின் சுதந்திர போராட்டங்கள் அவரை கொல்ல வகுக்கப்பட்ட திட்டங்கள் கோட்சேயின் பின்னணி விவரங்கள், காந்தியை அவன் வேவு பார்த்தது மற்றும் சுட்டுக் கொன்றது போன்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும்.
நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.