Home கலை உலகம் ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் ரஜினி கலந்து கொள்கிறார்

ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் ரஜினி கலந்து கொள்கிறார்

1075
0
SHARE
Ad

சென்னை – தனது உயிர்த் தோழி ஒருவரை இழந்து விட்டேன் என ஸ்ரீதேவி மறைவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள நேற்றிரவு விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றார்.

“நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். திரையுலகம் உண்மையான ஓர் சாதனையாளரை இழந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். அவர்களின் வலியை நானும் உணர்கிறேன்” என்றும் ரஜினிகாந்த் தனது அனுதாபச் செய்தியில் மேலும் கூறியிருக்கிறார். தனது இல்லத்தின் முன் குவிந்த பத்திரிக்கையாளர்களிடமும் ரஜினி பேசினார்.

ஏற்கனவே, இயக்குநர் பாரதிராஜா ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள நேற்று மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் “மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாக மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான்” எனத் தெரிவித்துள்ளார்.

துபாய் நகரில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 54-தான்.

அவரது நல்லுடல் மீதான பிரேதப் பரிசோதனைகள் முடிந்ததும், அவருக்கென காத்திருக்கும் அனில் அம்பானியின் தனிவிமானம் அவரது நல்லுடலை ஏற்றிக் கொண்டு மும்பை வந்தடையும்.

இதற்கிடையில் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகள் மும்பை ஜூஹூ மயானத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணிவரையிலான நிலவரங்களின்படி ஸ்ரீதேவி நல்லுடல் மீதான பிரேதப் பரிசோதனைகள் முடிவடையவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது நல்லுடல் மும்பை வந்து சேர தாமதமானால், அவரது இறுதிச் சடங்குகளிலும் மாற்றமிருக்கும்.