Home நாடு ஹராப்பான் கட்சிகள் சொந்த சின்னங்களில் போட்டியிடக்கூடும்: மகாதீர்

ஹராப்பான் கட்சிகள் சொந்த சின்னங்களில் போட்டியிடக்கூடும்: மகாதீர்

943
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கட்சியை, சங்கங்களின் பதிவிலாகா அங்கீகரிக்காமல் தாமதப்படுத்தி வருவதால், 14-வது பொதுத்தேர்தலில் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் தங்களது சொந்த சின்னங்களிலேயே போட்டியிடக்கூடும் என அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார்.

மலாக்கா அலோர் கஜாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மகாதீர், “எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் 14-வது பொதுத்தேர்தலில் ஹராப்பானாகப் போட்டியிடுவோமா அல்லது கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சொந்த சின்னங்களில் போட்டியிடுவோமா என்பது தெரியவில்லை”

“நாங்கள் எங்களது சின்னங்களிலேயே தனித்தனியாகப் போட்டியிட்டால், மக்கள் குழம்ப வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் பக்காத்தான் ஹராப்பான் கட்சி பதிவு செய்யப்படக்கூடாது என நஜிப் அப்துல் ரசாக் (பிரதமர்) நினைக்கிறார்” என மகாதீர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை பதிவு செய்ய வேண்டுமென சங்கப் பதிவிலாகாவை வலியுறுத்தி, மகாதீர் தலைமையிலான கூட்டணி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.