Home இந்தியா தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவிப்பு!

தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவிப்பு!

1426
0
SHARE
Ad

சென்னை – அண்ணாவையும் திராவிடத்தையும் டிடிவி தினகரன் அலட்சியப்படுத்திவிட்டதால், அவரது அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பந்த் அறிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச் 15-ம் தேதி, தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அணி ஒன்றை அறிவித்தார்.

இந்நிலையில், அந்த அணியின் பெயரில் அண்ணாவோ, திராவிடமோ இல்லாதது தனக்கு மிகுந்த அதிருப்தியளித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அண்ணா, தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவன். மனிதனை மனிதனாக்கிய மகோன்னதத்தின் பெயர் திராவிடம். அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை” என்று நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டிருக்கிறார்.