Home இந்தியா சசிகலா கணவர் நடராஜன் நிலைமை கவலைக்கிடம்

சசிகலா கணவர் நடராஜன் நிலைமை கவலைக்கிடம்

1021
0
SHARE
Ad
ம.நடராஜன் (கோப்புப் படம்)

சென்னை – உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள கிளெனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், தற்போது சிறையிலிருக்கும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.

தனது கணவரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதைத் தொடர்ந்து சிறையிலிருந்து தற்காலிக விடுப்பில் வெளிவந்து தனது கணவரை சசிகலா சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.