Home நாடு சபாநாயகரிடம் மன்னிப்புக் கேட்காத 3 ஜசெக எம்பி-க்கள் இடைநீக்கம்!

சபாநாயகரிடம் மன்னிப்புக் கேட்காத 3 ஜசெக எம்பி-க்கள் இடைநீக்கம்!

816
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தங்களின் செயலுக்கு, சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியாவிடம் மன்னிப்புக் கேட்காத 3 ஜசெக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று திங்கட்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஜசெக புருவாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே கூ ஹாம், ஜசெக பத்து காஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார், ஜசெக தைப்பிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கா கோர் மிங் ஆகியோர் இன்று மார்ச் 26-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக துணை சபாநாயகர் ரொனால்ட் கியாண்டி அறிவித்தார்.