Home உலகம் ஏமனில் இருந்து வந்த ஏவுகணைகளை முறியடித்தது சவுதி அரேபியா (காணொளி)

ஏமனில் இருந்து வந்த ஏவுகணைகளை முறியடித்தது சவுதி அரேபியா (காணொளி)

1122
0
SHARE
Ad

ரியாத் – ஞாயிற்றுக்கிழமை, சவுதி அரேபியா தலைநகர் ரியாத், தென்மேற்குப் பகுதியான காமிட் முஷாயிட், எல்லைப்பகுதியான நஜ்ரான் மற்றும் ஜிசான் ஆகிய நகரங்களை நோக்கி, ஏமனில் இருந்து வந்த 7 ஏவுகணைகளை, சவுதி அரேபியப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.

இத்தாக்குதல் முறியடிப்புச் சம்பவத்தின் போது, ஏவுகணைகளின் எரிந்த பாகங்கள் நகர்புறங்களில் விழுந்ததில், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.

“இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் தீர்மானம் 2216 மற்றும் 2231-ஐ அப்பட்டமாக மீறியிருக்கின்றன. இந்த தொடர் விரோத நடவடிக்கைகள் சவூதி அரேபியா இராஜ்ஜியத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகவும், வட்டார மற்றும் அனைத்துலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன” என சவுதி அரசிய தகவல் தொடர்பு அமைச்சு தமது அறிக்கையில் கூறியிருக்கிறது.

#TamilSchoolmychoice

Comments