Home நாடு தேர்தல் 14: சிலாங்கூரில் 10 தொகுதிகளில் அமானா போட்டி!

தேர்தல் 14: சிலாங்கூரில் 10 தொகுதிகளில் அமானா போட்டி!

872
0
SHARE
Ad

து கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமானா நெகாரா கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது.

இதனை அமானா தகவல் தொடர்பு இயக்குநர் காலிட் சமட் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கலந்தாலோசித்து இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த 10 தொகுதிகளில் செம்பாக்கா, மோரிப் மற்றும் உலு கெலாங் ஆகிய தொகுதிகளும் அடக்கம் என்றும் காலிட் சமட் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து விரிவான அறிவிப்பை சிலாங்கூர் காபந்து மந்திரி பெசார் அஸ்மின் அலி அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.