Home நாடு பக்காத்தானுக்கு தாவப் போகும் தே.முன்னணி தலைவர்கள் யார்?

பக்காத்தானுக்கு தாவப் போகும் தே.முன்னணி தலைவர்கள் யார்?

973
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – சில முக்கிய தேசிய முன்னணித் தலைவர்கள் பக்காத்தான் கூட்டணிக்குத் தாவத் தயாராக இருக்கிறார்கள் என துன் மகாதீர் அதிரடியாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அந்தத் தகவல் வெறும் அரசியல் பரபரப்புக்காக வெளியிடப்பட்டதா அல்லது அந்தத் தகவலில் உண்மை ஏதும் இருக்கிறதா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

ஒரு சில முக்கிய, பிரபலமான தேசிய முன்னணி தலைவர்கள் பக்காத்தானில் இணைவதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கும் மகாதீர், எனினும் அவர்களைப் பெயர் குறிப்பிட மறுத்துவிட்டார்.

அவ்வாறு பெயர் குறிப்பிட்டால் அவர்கள் அதற்காக தன்மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் மகாதீர் தெரிவித்தார.