Home நாடு பண்டானில் கால் பதிக்கிறார் வான் அசிசா

பண்டானில் கால் பதிக்கிறார் வான் அசிசா

859
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அங்கேயா, இங்கேயா என கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், பிகேஆர் கட்சித் தலைவி டத்தின்ஸ்ரீ வான் அசிசா பண்டானில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கடந்த 2 தவணைகளாக வெற்றி பெற்றுத் தற்காத்து வந்த இந்தத் தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் சிலாங்கூரிலேயே தனது அரசியல் தளத்தை அமைத்துக் கொள்ள வான் அசிசா முடிவெடுத்துள்ளார்.

தனது கணவரின் பாரம்பரியத் தொகுதியான பினாங்கின் பெர்மாத்தாங் தொகுதியில் வான் அசிசாவுக்குப் பதிலாக அவரது மகள் நுருல் இசா போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் காஜாங் சட்டமன்றத் தொகுதியை வான் அசிசா விட்டுக் கொடுத்துள்ளார். பிகேஆர் அதிகாரபூர்வ பட்டியலின்படி காஜாங் தொகுதியில் ஹீ லோய் சியான் போட்டியிடுகிறார்.

2013 பொதுத் தேர்தலில் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஹீலோய் சியான் இந்த முறை வான் அசிசாவின் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தப்படுகிறார்.