Home தேர்தல்-14 லெம்பா பந்தாய் தொகுதியில் மகாதீரின் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்!

லெம்பா பந்தாய் தொகுதியில் மகாதீரின் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்!

1041
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் கூட்டரசுப் பிரதேசத்தின் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாக உருமாறியிருக்கும் லெம்பா பந்தாய் தொகுதியின் நடுநாயகமாகத் திகழும் கம்போங் கெரிஞ்சி பகுதியில் மலாய் வாக்காளர்களிடையே பிரச்சாரம் செய்ய துன் மகாதீர் இன்று வியாழக்கிழமை இரவு வந்தபோது, அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

லெம்பா பந்தாய் தொகுதியில் பிகேஆர்-பக்காத்தான் கூட்டணி சார்பில் ஃபாமி பாட்சில் போட்டியிட அவரை எதிர்த்து தேசிய முன்னணியின் சார்பில் ராஜா நோங் சிங் களமிறங்குகிறார்.

நுருல் இசா கடந்த 2 தவணைகளாக தற்காத்து வந்த இந்தத் தொகுதியை இந்தப் பொதுத் தேர்தலில் அவர் தனது செயலாளரும், பிகேஆர் கட்சியின் தொடர்புப் பிரிவின் இயக்குநருமான ஃபாமி பாட்சில் வசம் ஒப்படைத்து விட்டு, பினாங்கில் தனது தந்தையாரின் பாரம்பரியத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

லெம்பா பந்தாய் தொகுதியில் நேற்றிரவு முன்னாள் நிதியமைச்சரும் அம்னோவின் பொருளாளருமான டாயிம் சைனுடின் ஃபாமி பாட்சிலுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார்.