
கோலாலம்பூர் – நெகிரி செம்பிலான் மாநில பராமரிப்பு மந்திரி பெசார் முகமட் ஹசானுக்கு எதிராக ரந்தாவ் சட்டமன்றத்தில் போட்டியிட, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி பிகேஆர் கட்சியின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முற்பட்டபோது, தன்னை தடுத்து நிறுத்தியதற்காகவும், கடமையைத் தவறான முறையில் செயல்படுத்தியதற்காகவும் தேர்தல் ஆணையம், அதன் தேர்தல் அதிகாரி அமினோ அகோஸ் சுயுப் ஆகியோர் மீது ஸ்ரீராம் சின்னசாமி 7.6 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
நாட்டின் அரசியல் சாசனம் தனக்கு வழங்கியுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்றும் வழக்கில் தெரிவித்துள்ள ஸ்ரீராம், இழப்பீடாக 5 மில்லியன் ரிங்கிட்டையும், சிறப்பு கூடுதல் இழப்பீடாக 2.6 மில்லியன் ரிங்கிட்டையும், மேலும் நீதிமன்றம் நியாயம் எனக் கருதும் நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தனது வழக்கறிஞர் ஹனிப் காத்ரி நிறுவனம் மூலம் நேற்று திங்கட்கிழமை (7 மே) இந்த வழக்கை ஸ்ரீராம் தொடுத்துள்ளார்.
இதற்கிடையில் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் முகமட் ஹசான் போட்டியின்றி வென்றதாகவும், தேர்தல் ஆணையம் அறிவித்து, அரசாங்கப் பதிவேட்டிலும் அந்தத் தேர்தல் முடிவை பதிவேற்றியிருக்கிறது.