Home உலகம் டிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்

டிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்

1080
0
SHARE
Ad

வாஷிங்டன் – உலகின் முதல் நிலை அரசியல் வைரிகளாகப் பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் தங்களின் வரலாற்று பூர்வ சந்திப்பை எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடத்துவர்.

இந்தத் தகவலை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள டிரம்ப் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சந்திப்பின் வழி நாங்கள் இருவரும் உலக அமைதிக்காக சிறப்பான தருணத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

வடகொரிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 3 அமெரிக்கர்களை வரவேற்கிறார் டிரம்ப்

இதற்கிடையில், வடகொரியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மூன்று அமெரிக்கர்களை நல்லெண்ண அடிப்படையில் வடகொரியா விடுதலை செய்ததை முன்னிட்டு அவர்கள் அமெரிக்கா வந்தடைந்தனர்.

#TamilSchoolmychoice

அவர்களை டிரம்ப் முன்னின்று வரவேற்றார்.