Home தேர்தல்-14 சபா நெருக்கடி: வாரிசான் 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது

சபா நெருக்கடி: வாரிசான் 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது

1151
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – (இரவு 9.00 மணி நிலவரம்)

சபாவில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இரவு மூசா அமான் சபா முதலமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணிக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாகவும், எனவே மூசா அமான் பதவி விலகிக் கொண்டு, புதிய மாநில அரசாங்கத்தை அமைக்க சபா ஆளுநர் தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் அறிவித்துள்ளார்.