Home நாடு சரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்

சரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்

1431
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் எதிர்பார்க்கப்படும் வேளையில் சரவாக் மாநிலத்தில் இருந்து இரண்டு அமைச்சர்கள் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின் சோங் சியங் ஜென் மற்றும் செலாங்காவ் நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியான் (பிகேஆர்) ஆகிய இருவரும் மகாதீர் அமைச்சரவையில் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரவாக் மாநிலத்தின் பக்காத்தான் ஹரப்பான் தலைவர்களைக் கொண்ட குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்தது.