Home நாடு காவல் துறையின் கைப்பிடியில் இருந்து தப்பித்தார் ஜமால் யூனுஸ்!

காவல் துறையின் கைப்பிடியில் இருந்து தப்பித்தார் ஜமால் யூனுஸ்!

1284
0
SHARE
Ad
டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனுஸ், காவல் துறையின் கண்பார்வையில் இருந்து தப்பித்து காணாமல் போய்விட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் வேட்டை அதிரடியாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

அம்பாங் புத்திரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை (மே 26) மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 3 ஆயிரம் ரிங்கிட் பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அவருக்கு பிணை வழங்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த தருணத்தில் அவர் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து நழுவி தப்பித்து விட்டார்.

தற்போது அவரைத் தேடும் வேட்டை தொடர்வதாக சிலாங்கூர் குற்றத்துறை இலாகா தலைவர் பாட்சில் அமாட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி மதுபான கண்ணாடிப் போத்தல்களை சிலாங்கூர் மாநில தலைமைச் செயலகத்தின் முன் போட்டு உடைத்தது – மற்றும் தனது கைத்துப்பாக்கியை புகைப்படத்தின் வழி காண்பித்தது போன்ற குற்றங்களுக்காக 48 வயதான ஜமால் யூனுஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.