Home நாடு சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்கிறார் அன்வார்!

சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்கிறார் அன்வார்!

796
0
SHARE
Ad

ஷா ஆலாம் – விடுதலையானது முதல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் சுல்தான்களைச் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாளை வியாழக்கிழமை சிலாங்கூர் சுல்தானைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அன்வார் இப்ராகிமுக்கும் சிலாங்கூர் சுல்தானுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்பட்டது.

அப்போதைய மந்திரி பெசார் காலிட் இப்ராகிமுக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாராக வான் அசிசாவை நியமிக்க அன்வார் இப்ராகிம் முயற்சிகள் மேற்கொண்டபோது பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளில் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்வாருக்கு வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ விருதை சிலாங்கூர் சுல்தான் மீட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் ஓரினப்புணர்ச்சி வழக்கு காரணமாக சிறைத்தண்டனை பெற்ற அன்வார் கடந்த மே 16-ஆம் தேதி விடுதலையான பின்னர் முதன் முறையாக சிலாங்கூர் சுல்தானை நாளை சந்திக்கிறார்.

ஏற்கனவே, அன்வார் ஜோகூர் சுல்தானையும், பகாங் தெங்கு மக்கோத்தா தெங்கு அப்துல்லாவையும், கிளந்தான் சுல்தான் மாஹ்முட்டையும் சந்தித்திருக்கிறார்.