Home நாடு லங்காவியில் ’30 பெட்டிகளுடன்’ காணப்பட்ட நஜிப், ரோஸ்மா தம்பதி!

லங்காவியில் ’30 பெட்டிகளுடன்’ காணப்பட்ட நஜிப், ரோஸ்மா தம்பதி!

1638
0
SHARE
Ad

லங்காவி – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், லங்காவியில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் 30 பயணப் பெட்டிகளுடன் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

லங்காவியில் உள்ள பிரபலத் தங்கும்விடுதிக்கு அவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை மாலை வந்திறங்கியதாகவும், வரும் ஜூன் 20-ம் தேதி வரையில் அவர்கள் இருவரும் அங்கு தங்குவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

மேலும், முன்னாள் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நவாவி அகமட், முன்னாள் ஆயர் ஹங்காட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ராவி அப்துல் ஹமீட், முன்னாள் குவா சட்டமன்ற உறுப்பினர் நோர் சைடி நன்யான் மற்றும் இன்னும் 2 பேர் நஜிப்பை தங்கும்விடுதியில் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

லங்காவியில் கோல்ஃப் விளையாடுவதற்காக நஜிப் வந்திருப்பதாக அந்தத் தங்கும்விடுதியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.