Home நாடு அல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு!

அல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு!

933
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படவிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் அறிவித்திருக்கிறார்.

“நாங்கள் மறுவிசாரணை செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் காவல்துறை புகாருடன் தற்போது டாங் வாங்கியில் புதிதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் புகாரையும் சேர்த்து மறுவிசாரணையைத் துவங்கவிருக்கிறோம்” என்று முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, அல்தான்துயாவின் தந்தை டாக்டர் செடிவ் ஷாரிபு, டாங் வாங்கி காவல்நிலையத்தில் புதிய புகார் ஒன்றை அளித்திருப்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.