கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையிலான முழுமையான அமைச்சரவை மாமன்னர் முன்னிலையில் பதவியேற்கிறது.
தற்போது 13 அமைச்சர்களுடன் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. இதுவரையில் யாரும் துணையமைச்சர்களாக நியமிக்கப்படவில்லை. இந்த அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய கடந்த ஒரு மாதமாக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது புதிய அமைச்சரவையின் இறுதி வடிவம் முடிவு செய்யப்பட்டு, புதிய அமைச்சர்களும், துணையமைச்சர்களும் இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் பதவியேற்கின்றனர்.
மே 9 பொதுத் தேர்தல் முடிந்து இவ்வளவு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் அமைச்சரவை பதவியேற்பது மலேசிய வரலாற்றில் இதுவே முதன் முறை எனக் கருதப்படுகிறது.