Home நாடு ஷாஹிடான் காசிம் சகோதரர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்

ஷாஹிடான் காசிம் சகோதரர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்

979
0
SHARE
Ad
டத்தோ இஸ்மாயில் காசிம்

கங்கார் – பெர்லிஸ் அம்னோவில் நேர்ந்த சர்ச்சை, அம்மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் உருவான போராட்டங்கள் – ஆகியவற்றின் நடுநாயகமாகத் திகழ்ந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம் கெடா மாநில பிகேஆர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.

பெர்லிஸ் மாநில அம்னோ தலைவரான ஷாஹிடான் காசிமின் இளைய சகோதரரான இஸ்மாயில் காசிம் பெர்லிஸ் மாநிலத்திலுள்ள தஞ்சோங் துவாலாங் சட்டமன்ற உறுப்பினராவார். அவரை மந்திரி பெசாராக அம்னோ பெர்லிஸ் பரிந்துரைத்தது.

எனினும், அவருக்குப் பதிலாக அஸ்லான் மான் என்பவரை பெர்லிஸ் சுல்தான் நியமித்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் இஸ்மாயில் காசிம் அம்னோ மற்றும் தேசிய முன்னணியில் இருந்து விலகினார்.

தற்போது கெடா மாநில பிகேஆர் கட்சி நடத்தப்படும் விதம் குறித்து தான் ஈர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த இஸ்மாயில் காசிம் கெடா பிகேஆர் கட்சியில் சேரும் முடிவை அறிவித்திருக்கிறார்.