Home நாடு சாகிர் நாயக் – மகாதீர் சந்திப்பு

சாகிர் நாயக் – மகாதீர் சந்திப்பு

1197
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் இன்று சனிக்கிழமை பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்தச் சந்திப்பு திட்டமிடப்படாத ஒன்று என்றும் கூறப்படுகிறது. இருவரும் பேசியது என்ன என்பது குறித்து இதுவரையில் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நேற்று வெள்ளிக்கிழமை சாகிர் நாயக் விவகாரம் குறித்துக் கருத்துரைத்த மகாதீர், பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாமல் இருந்தால் அவரை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டோம் என அறிவித்திருந்தார்.

மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்திய தொலைக்காட்சி அலைவரிசையான ரிபப்ளிக் டிவிக்கு வழங்கிய பேட்டியில் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தங்களின் விண்ணப்பம் மலேசிய அரசாங்கத்தின் வசம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் சம்பந்தப்பட்ட மலேசிய அரசாங்க இலாகாக்களுடன் இதுகுறித்து தொடர்பில் இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருக்கிறார்.

எனினும், வியாழக்கிழமை (ஜூலை 5) பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மலேசியக் காவல் துறைத் தலைவர் புசி ஹருண் காவல் துறையைப் பொறுத்தவரை இதுவரையில் சாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பம் எதனையும் தாங்கள் இதுவரை பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.