Home நாடு இயல்பாகவே வாக்காளராகப் பதிவு! வயதும் குறைப்பு!

இயல்பாகவே வாக்காளராகப் பதிவு! வயதும் குறைப்பு!

1072
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நாட்டின் தேர்தல் வாக்களிப்பு முறைகளில் மாபெரும் சீர்திருத்தங்களை ஆராய்ந்து வருவதாக பிரதமர் துறையின் அமைச்சர் லியூ வுய் கியோங் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது வாக்காளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதான 21 என்பதை இனி 18-ஆகக் குறைப்பதற்கும், ஒருவருக்கு 18 வயதானதும் இயல்பாகவே அவரது பெயரை வாக்காளராகப் பதிந்து கொள்ளப்படும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கும் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாகவும் லியூ தெரிவித்தார்.

இந்த புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் நடப்பிலிருக்கும் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது, விதிமுறைகளை மாற்றுவது, அமுலாக்க நடைமுறைகளை அறிமுகப்படுத்துவது ஆகிய அம்சங்களில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருவதாகவும் லியூ தெரிவித்திருக்கிறார்.