Home English News பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தல் – செப்டம்பர் 4

பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தல் – செப்டம்பர் 4

943
0
SHARE
Ad
பலாக்கோங் இடைத் தேர்தல் – புள்ளி விவரங்கள்

புத்ரா ஜெயா – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டது.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் இங் தியன் சீ எதிர்பாராதவிதமாக சாலை விபத்தொன்றில் அண்மையில் காலமானார். மே 9 பொதுத் தேர்தலில் ஜசெகவைச் சேர்ந்த இங் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு தேசிய முன்னணி வேட்பாளரான லிம் சின் வா என்பவரை 35,538 வாக்குகளில் தோற்கடித்தார். 2013 பொதுத் தேர்தலிலும் இங் இதே பலாக்கோங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறும்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணி சார்பில் இங்கு ஜசெக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், தேசிய முன்னணி சார்பில் மசீச போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.