Home உலகம் ஜோகூர் சுல்தான் அன்வாரை நலம் விசாரித்தார்

ஜோகூர் சுல்தான் அன்வாரை நலம் விசாரித்தார்

1528
0
SHARE
Ad

இஸ்தான்புல் – துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்றது.

ஜோகூர் சுல்தானின் வருகைக்கும் தன்மீது அவர் காட்டிய அன்பிற்கும் தனது முகநூல் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்ட அன்வார், மருத்துவர் குழுவையும் ஜோகூர் சுல்தான் சந்தித்து தனது உடல் நல முன்னேற்றம் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தான் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், நாடு திரும்பலாம் என்றும் தனக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் குழு தெரிவித்ததாக அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.