Home இந்தியா ராகுல் காந்தி கருணாநிதியைச் சந்தித்தார்

ராகுல் காந்தி கருணாநிதியைச் சந்தித்தார்

1328
0
SHARE
Ad

சென்னை – இங்குள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக திமுக தலைவர்கள் கூறியிருக்கும் நிலையில், இந்திய நேரப்படி மாலை 6.00 மணியளவில் அவரைக் காண வந்த ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் படுக்கையில் படுத்தபடி இருக்கும் கருணாநிதியின் காதில் ஸ்டாலின் ராகுல் காந்தியின் வருகையைத் தெரிவிப்பதுபோல் ஏதோ கூறுகிறார். படுக்கையில் படுத்திருக்கும் கருணாநிதிக்கு உயிர்காக்கும் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதையும் அந்தப் புகைப்படம் எடுத்துக் காட்டுகிறது.

கலைஞரைக் காண வந்த ராகுலுடன் திருநாவுக்கரசு, கனிமொழி, ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்களிடையே உற்சாகம் பிறந்துள்ளது. கலைஞரின் உடல்நிலையில் உண்மையிலேயே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இந்தப் புகைப்படம் சுட்டிக் காட்டுவது போல் அமைந்திருக்கிறது.