Home உலகம் ஜப்பான் ‘புல்லட்’ இரயில் ஓட்டினார் மகாதீர்

ஜப்பான் ‘புல்லட்’ இரயில் ஓட்டினார் மகாதீர்

1873
0
SHARE
Ad

தோக்கியோ – ஜப்பானுக்கு அலுவல் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் அங்கு கியூஷூ இரயில்வே நிறுவனத்திற்கு வருகை தந்து அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற ஷிங்கான்சென் புல்லட் இரயில் எனப்படும் அதிவிரைவு இரயிலை ஓட்டிப் பார்த்தார்.

உண்மையிலேயே அந்த புல்லட் இரயிலை ஓட்டினாரா – அனுபவமில்லாமல் எப்படி அவரால் முடிந்தது – என நீங்கள் கேட்பது புரிகிறது..உண்மையில் அவர் ஓட்டியது உண்மையான இரயிலை அல்ல!

அந்த இரயிலில் பயணம் செய்வது போல்…அந்த இரயிலை ஓட்டிப் பார்ப்பதுபோல் அனுபவத்தைத் தரும் பாவனை சூழல் (simulator) தரும் மையத்தை கியூஷூ இரயில் நிறுவனம் தனது தொழிற்சாலையில் அமைத்திருக்கிறது. அங்கு அமர்ந்துதான் மகாதீர் புல்லட் இரயிலை ஓட்டிப் பார்த்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அந்நிறுவனத்திற்கு வருகை தந்த மகாதீர் அங்குள்ள அந்த பாவனை இரயிலை ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஓட்டிப் பார்த்திருக்கிறார். தான் அந்த அனுபவத்தைப் பெற்ற காட்சியை காணொளியாக தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் மகாதீர்.

மகாதீரை விமான நிலையத்தில் வரவேற்கும் புக்குவோக்கா ஆளுநர்

4 நாட்கள் வருகை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஜப்பான் புக்குவோக்கா வந்திருக்கும் மகாதீரை புக்குவோக்கா மாநில ஆளுநர் விமான நிலையத்தில் வரவேற்றார்.

ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மகாதீருடன் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கும் உடன் வந்துள்ளார்.