Home நாடு நஜிப் வாக்குமூலம் வழங்க காவல் துறைக்குக் கொண்டு வரப்பட்டார்

நஜிப் வாக்குமூலம் வழங்க காவல் துறைக்குக் கொண்டு வரப்பட்டார்

877
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு கடந்த 16 மணி நேரத்திற்கும் மேலாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் இன்று வியாழக்கிழமை காலை 8.50 மணியளவில் கோலாலம்பூரிலுள்ள காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார்.

இங்கு நஜிப்பிடம் இருந்து காவல் துறையின் சார்பில் வாக்குமூலம் பெறப்படும்.

அதன் பின்னர் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கோலாலம்பூர் பிற்பகல் 3.00 மணிக்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்திற்கு (செஷன்ஸ் நீதிமன்றம்) நஜிப் கொண்டு வரப்பட்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் முறையாகத் சுமத்தப்படும்.