Home இந்தியா டில்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த மோடி

டில்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த மோடி

1229
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வியாழக்கிழமை புதுடில்லியில் உள்ள துவாரகா என்ற இடத்தில் அமையவிருக்கும் அனைத்துலக தரத்திலான பிரம்மாண்டமான மாநாட்டு கண்காட்சி மண்டபத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது டில்லி துவாரகா செல்லும்போதும் அங்கிருந்து திரும்பும்போதும் டில்லி மெட்ரோ இரயிலில் நரேந்திர மோடி மக்களோடு மக்களாக ஒன்றாக அமர்ந்து பயணம் செய்தார்.

தென் டில்லி துவாரகா பகுதியில் அமையவிருக்கும் இந்தியா அனைத்துலக மாநாட்டு மையம் (India International Convention Centre -IICC) 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரக் கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.

#TamilSchoolmychoice

ஏறத்தாழ 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமையவிருக்கும் இந்த மாநாட்டு மையம் கட்டி முடிக்கப்பட்டதும் உலகின் மிகப் பெரிய ஐந்து மாநாட்டு மண்டபங்களில் ஒன்றாகவும் ஆசியாவிலேயே மிகப் பெரிய 3 மாநாட்டு மையங்களில் ஒன்றாகவும் திகழும்.

90 ஹெக்டர் பரப்பளவில் அதி நவீனத் தொழில்நுட்பத்துடன் ஷங்காய், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நகர்களில் அமைந்துள்ள மாநாட்டு மையங்களுக்கு நிகராக இந்தப் புதிய மையம் திகழும்.

புதுடில்லி நகருக்குள் இன்னொரு துணை நகராக இந்த மாநாட்டு மையம் இயங்கும். இதன் முதல்கட்ட கட்டுமானம் 2019-ஆம் ஆண்டிலும், இரண்டாவது கட்டக் கட்டுமானம் 2024-ஆம் ஆண்டிலும் நிறைவு பெறும்.

இந்த மாநாட்டு மையத்தின் அருகில் அமைந்திருக்கும் புதுடில்லி விமான நிலையத்திலிருந்து அதிவிரைவு மெட்ரோ இரயில் மூலம் இணைக்கும் போக்குவரத்துத் தொடர்பு வசதிகளையும் இந்த மாநாட்டு மையம் கொண்டிருக்கும்.