Home நாடு 27 ஆயிரம் வாக்குகளுடன் அன்வார் முன்னணி

27 ஆயிரம் வாக்குகளுடன் அன்வார் முன்னணி

1272
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – (இரவு 7.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணியோடு போர்ட்டிக்சன் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்தது. மாலை 4.00 மணி வரை மொத்த வாக்காளர்களில் 54 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.

இரவு 7.30 மணி வரை எண்ணப்பட்ட வாக்குகளில் மொத்த வாக்குகளில் அன்வார் இப்ராகிம் சுமார் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அவர் 27 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து அடுத்த நிலையில் இருக்கும் பாஸ் கட்சியின் வேட்பாளர் 6,800 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முகமட் இசா சமாட் 3,800 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது நிலையில் இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மிகப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் அன்வார் வெற்றி பெறுவார் எனக் கணிக்கப்படுகிறது.

இந்தியர்களின் பெருவாரியான வாக்குகள் அன்வாருக்கே கிடைத்தன என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, செங்காங் தோட்டம், அத்தர்ட்டன் தோட்டம் என்ற இந்திய வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரு வாக்களிப்பு மையங்களில் பெரும்பான்மை வாக்குகள் அன்வாருக்கே கிடைத்தன.

மொத்தமுள்ள 32 வாக்களிப்பு மையங்களில் அனைத்து மையங்களிலும் அன்வாரே பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கிறார்.

இவை அனைத்தும் அதிகாரபூர்வமற்ற தகவல்களாகும்.