Home Video “அனைத்தும் பொய்! வழக்கைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்” – வைரமுத்து பதில்

“அனைத்தும் பொய்! வழக்கைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்” – வைரமுத்து பதில்

1282
0
SHARE
Ad

சென்னை – பாடகி சின்மயி உள்ளிட்ட சில பெண்கள் தன்மீது பகிரங்கமாகக் கூறிவரும் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்கப் பொய் என  கவிப் பேரரசு வைரமுத்து கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் தகுந்த பதில்களையும் அவை பொய் என்பதற்கான ஆதாரங்களையும் தான் வைத்திருப்பதாகவும் கூறியிருக்கும் வைரமுத்து, “என்மீது வழக்கு போடுங்கள். நான் காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக தனது வழக்கறிஞர்களையும், சான்றோர்களையும் சந்தித்துப் பேசிவந்ததாகவும் வைரமுத்து தனது டுவிட்டர் தளத்தில் காணொளி (வீடியோ) வழியாக விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னதாக, தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் உண்மையைக் காலம் பதில் சொல்லும் என்றும் கூறியிருந்தார்.

வைரமுத்துவின் அந்தக் காணொளியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:-