Home நாடு நஜிப் தம்பதியர் பெற்ற நெகிரி செம்பிலான் மாநில ‘டத்தோஸ்ரீ உத்தாமா’ விருதுகள் இரத்து

நஜிப் தம்பதியர் பெற்ற நெகிரி செம்பிலான் மாநில ‘டத்தோஸ்ரீ உத்தாமா’ விருதுகள் இரத்து

798
0
SHARE
Ad

சிரம்பான் – நெகிரி செம்பிலான் மாநில சுல்தான் அரண்மனை வெளியிட்ட அறிக்கையின்படி முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோருக்கும் வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ உத்தாமா விருதுகள் சுல்தானால் பறிக்கப்பட்டிருக்கின்றன.

நஜிப்புக்கு இந்த விருது 2005-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. எனினும் மற்ற மாநிலங்கள் வழங்கிய டத்தோஸ்ரீ விருதுகள் இன்னும் நஜிப்புக்கு இருப்பதால் அவர் தொடர்ந்து ‘டத்தோஸ்ரீ என்ற மரியாதையுடனே அழைக்கப்படுவார். பகாங், மலாக்கா, சபா, சரவாக், பினாங்கு, கிளந்தான், கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களின் டத்தோஸ்ரீ விருதுகளை நஜிப் பெற்றிருக்கிறார்.

ரோஸ்மா மன்சோருக்கு 2006-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ விருதும் நெகிரி செம்பிலான் மாநில சுல்தானால் பறிக்கப்பட்டிருக்கிறது. நஜிப் போன்று ரோஸ்மாவுக்கும் மற்ற மாநிலங்களில் இருந்து டத்தோஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

நெகிரி மாநில அரண்மனையின் பாரம்பரிய மரியாதையையும், கௌரவத்தையும் நிலைநாட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அரண்மனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.