Home நாடு நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை – சவுதிக்கு சம்பந்தமில்லை

நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை – சவுதிக்கு சம்பந்தமில்லை

1307
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – தனது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை சவுதி அரசாங்கத்தின் நன்கொடை என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் அடல் அகமட் அல் ஜூபிர், அந்தப் பணத்துக்கும் தனது நாட்டு அரசாங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை எனக் கூறியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) புத்ரா ஜெயாவில் விஸ்மா புத்ராவில் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவைச் சந்தித்தார். அப்போது, அல் ஜூபிர் இந்தத் தகவலை வெளியிட்டதாக சைபுடின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

சவுதி வெளியுறவு அமைச்சர் அல் ஜூபிர் மகாதீரைச் சந்தித்தபோது…(படம்: நன்றி – துன் மகாதீர் டுவிட்டர் பக்கம்)

ஆனால், இதே சவுதி வெளியுறவு அமைச்சர்தான் 2016-ஆம் ஆண்டில் நஜிப்புக்கு அனுப்பப்பட்ட அந்தப் பணம் சவுதி அரசாங்கத்தின் உண்மையான நன்கொடை என அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது தனது நிலைப்பாட்டில் தலைகீழாக மாறியிருக்கிறார்.

இதற்கிடையில் 1எம்டிபி ஊழல் மற்றும் 2.6 பில்லியன் நன்கொடை என்ற இரு விவகாரங்களிலும் மலேசிய அரசாங்கத்துக்கு சவுதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார்.