Home Uncategorized 135 நிமிடங்கள் உரையாற்றிய லிம் குவான் எங்

135 நிமிடங்கள் உரையாற்றிய லிம் குவான் எங்

1150
0
SHARE
Ad
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனை செய்யப்படுகிறது…

கோலாலம்பூர் – இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங் மாலை 4.00 மணிக்கு 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து சுமார் 135 நிமிடங்கள் (2 மணி நேரம் 15 நிமிடங்கள்) உரையாற்றினார்.

மாலை 4.00-க்குத் தனது உரையைத் தொடங்கிய லிம் குவான் எங் மாலை 6.15 மணிவரை வரவு செலவுத் திட்டத்தின் பல்வேறு கூறுகள், முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

பல இடங்களில் அவரது உரையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து எதிர்ப்பு தெரிவித்தாலும் விடாப்பிடியாக தனது உரையை அவர் தொடர்ந்து நிகழ்த்தினார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக 1எம்டிபி விவகாரங்கள் குறித்தும், அரசாங்கப் பணம் திருடப்பட்டது குறித்தும், அமெரிக்க நீதித்துறை ஜோ லோ உள்ளிட்ட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருப்பது குறித்தும் அவர் தனது உரையில் விவரித்த போது எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

அதே வேளையில் நம்பிக்கைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல தடவைகளில் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்து லிம் குவான் எங் உரையை ஆதரித்துக் குரல் எழுப்பினர்.