Home கலை உலகம் சர்கார்: முருகதாசைக் கைது செய்யத் தடை

சர்கார்: முருகதாசைக் கைது செய்யத் தடை

1485
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் மாலை 5.30 நிலவரம்) சர்கார் பட விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆகக் கடைசியான தகவல்கள் பின்வருமாறு:

  • சர்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் (படம்) சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இன்று காலை மனு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 27-ஆம் தேதி வரை முருகதாசைக் கைது செய்யத் தடைவிதித்தது.
  • மேலும் முருகதாஸ் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகின்றது என்பதைத் தெரிவிக்குமாறு தமிழகக் காவல் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தனது முன்ஜாமீன் மனுவில், தான் தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்படலாம் என்று முருகதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.