Home வணிகம்/தொழில் நுட்பம் நெட்பிலிக்ஸ் உள்ளிட்ட இணையம் வழி சேவைகள் பெறும் பயனர்களுக்கு வரி விதிப்பு

நெட்பிலிக்ஸ் உள்ளிட்ட இணையம் வழி சேவைகள் பெறும் பயனர்களுக்கு வரி விதிப்பு

1218
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகம் எங்கிலும் திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இணையம் வழி கணினிகள் மற்றும் கையடக்கக் கருவிகளுக்கு கட்டண முறையில் வழங்கும் சேவைகளைக் கொண்டிருக்கும் நிறுவனம் நெட்பிலிக்ஸ்.

மலேசியாவிலும் இந்த நெட்பிலிக்ஸ் சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நெட்பிலிக்ஸ் பயனர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஒரு குறிப்பிட்ட தொகை வரியாக விதிக்கப்படும் என அண்மையில் 2019-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்த லிம் குவான் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

நெட்பிலிக்ஸ் மட்டுமின்றி மென்பொருள், இசைகள், பாடல்கள், காணொளிகள் மின்னியல் விளம்பரங்கள் ஆகியவற்றை கட்டணம் செலுத்தி இணையம் வழி பெறும் பயனர்களுக்கும் வரிவிதிப்பு நடைமுறை கொண்டு வரப்படும்.

எனினும், வரிவிதிப்புக்கான தொகை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த வரிவிதிப்பினால், இணையம் வழி கட்டண முறையில் சேவை வழங்கும் நெட்பிலிக்ஸ், ஸ்போட்டிஃபை (Spotify) மற்றும் ஸ்டீம் (Steam) போன்ற நிறுவனங்களின் வணிகமும், வருமானமும் பாதிப்படையலாம் எனக் கருதப்படுகிறது.