Home நாடு அமைச்சரின் மகன் தலையீடு செய்யும் அமைச்சு எது?

அமைச்சரின் மகன் தலையீடு செய்யும் அமைச்சு எது?

1147
0
SHARE
Ad

MACCபுத்ரா ஜெயா – நடப்பு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் ஓர் அமைச்சில் அந்த அமைச்சுக்கான அமைச்சரின் மகன் அளவுக்கதிகமாக தலையிடுகிறார் என்றும், அமைச்சின் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் துன் மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஊழல் தடுப்பு ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தும் என துன் மகாதீர் அதற்குப் பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட அமைச்சரின் மகன், அமைச்சின் நடவடிக்கைகளையும் நடைமுறைகளையும் நிர்ணயிக்கிறார் என்றும் அமைச்சு தொடர்பான குத்தகைகள் எந்த நிறுவனத்திற்குக் கிடைக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார் என்றும் புகார்கள் எழுப்பப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சு எது – யார் அந்த அமைச்சர் – என்ற ஆரூடங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.