Home உலகம் இண்டர்போல் புதிய தலைவர் தென் கொரியாவின் கிம் ஜோங் யாங்

இண்டர்போல் புதிய தலைவர் தென் கொரியாவின் கிம் ஜோங் யாங்

1474
0
SHARE
Ad

துபாய் – இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை அமைப்பின் புதிய தலைவராக தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் யாங் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டார் என இண்டர்போல் நேற்று புதன்கிழமை அறிவித்தது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரஷியாவின் பிரதிநிதியை மேற்கத்திய நாடுகள் ஆதரிக்காத காரணத்தால் அவர் தோல்வி அடைந்தார். தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் அமெரிக்காவின் முழுமையான ஆதரவைப் பெற்றிருந்தார்.

இண்டர்போல் அமைப்பில் இடம் பெற்றிருக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் துபாய் நகரில் நடத்திய ஒரு மாநாட்டில் இந்தப் புதிய தேர்வு அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

சீனாவின் மெங் ஹோங் வெய் (படம்) கடந்த முறை இண்டர்போல் அமைப்பிற்குத் தலைவராக இருந்தார். ஆனால் செப்டம்பரில் 10 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரிக்கப்படுகிறார் என அந்நாடு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அவர் எங்கே இருக்கிறார் என்ற சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது.

மெங் ஹோங் வெய்க்குப் பதிலாக தற்போது கிம் ஜோங் யாங் இண்டர்போல் தலைவராகத் தேர்வு பெற்றுள்ளார்.