Home நாடு சரவாக்கிலும் சிறகு விரிக்கிறது மகாதீரின் பெர்சாத்து கட்சி

சரவாக்கிலும் சிறகு விரிக்கிறது மகாதீரின் பெர்சாத்து கட்சி

832
0
SHARE
Ad

பிந்துலு – குறுகிய காலத்தில் மிக விரைவாக வளர்ந்து வரும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சி சரவாக்கிலும் காலடி வைக்கிறது. சரவாக் மாநிலத்தில் பெர்சாத்து கட்சியைத் தொடக்க நேற்று சனிக்கிழமை பிரதமரும் பெர்சாத்து கட்சித் தலைவருமான துன் மகாதீர் சரவாக் மாநிலத்தின் பிந்துலு நகர் வந்தடைந்தார்.

“நாட்டிலேயே மிகச் செல்வச் செழிப்புள்ள மாநிலம் சரவாக்தான். ஆனால் இங்குள்ள மக்கள் இன்னும் ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் இந்த மாநிலத்திற்காக நிறைய செய்திருக்கிறது. ஆனால், அவர்களுக்குரிய அரசாங்க உதவிகள் முறையாக சரவாக் மாநில அரசியல் கட்சிகளால் பகிர்ந்தளிக்கப்படவில்லை. அதை உறுதி செய்யவே நாங்கள் சரவாக் மாநிலத்தில் கிளைகளை அமைக்கவிருக்கிறோம்” என கட்சியின் தொடக்க விழாவில் மகாதீர் கூறினார்.

பெர்சாத்து, மலாய்க்காரர்களுக்கான கட்சியானாலும், சரவாக் மாநிலத்தில் பூமிபுத்ரா அல்லாதவர்களையும் இணைத்துக் கொள்ளத் தாங்கள் முடிவு செய்துள்ளதாகவும், எனினும் கட்சியில் அவர்களுக்குரிய உரிமைகளில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் மகாதீர் தனதுரையில் கூறினார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியின் தொடக்க விழாவில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.

சரவாக் மாநிலத்தின் பின்தங்கிய பல பகுதிகளுக்குத் தான் சென்றிருப்பதாகவும், அங்குள்ள மக்கள் இன்னும் மற்ற மலேசியர்களை விட இன்னும் 30 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் வாழ்கிறார்கள் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சரவாக் மாநிலத்தில் பெர்சாத்து கட்சிக்குக் கிடைத்து வரும் ஆதரவு உற்சாகமளிக்கிறது என்று கூறினார்.