இதன் மூலம் அவர் இலங்கைப் பிரதமராக தொடர்ந்து நீடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் டிசம்பர் 12-ஆம் தேதி மீண்டும் கூடவிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றம் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடுத்திருக்கும் வழக்கு மீதிலான தீர்ப்பை வழங்கும்.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 122 பேர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு டிசம்பர் 12-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்படும். இதற்கிடையில்தான் ராஜபக்சே பிரதமராகப் பதவி வகித்த காலகட்டத்தில் மேற்கொண்ட முடிவுகள், நியமனங்கள் செல்லாது என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.